ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
பெரியபாளையம் அருகே சீரடி சாய்பாபா கோவிலில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பெரியபாளையம் அருகே ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று பாபாவை தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம்-ஆரணி இடையே உள்ள ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆண்டு கடைசி நாளான 31.ஆம் தேதி அன்று இரவு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தொடர்ந்து இன்று புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் தங்களது கரங்களால் பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் ஆரத்தி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் யாகசாலை அமைத்து பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பகல் 12 மணி அளவில் பாபாவிற்கு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது,இளநீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தொடர்ந்து மதிய ஆரத்தியில் சுற்று வட்டார சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று பஜனை,ஆரத்தி பாடல்கள் பாடினர்.
இதனையடுத்து பாபாவிற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவா சாய் சேவா அறக்கட்டளையினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.