ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜைகள்
ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது
ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவிலில் 2023 ஆம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று 31.தேதி கோவிலுக்கு திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
இரவு 8 அளவில் பாபாவிற்கு பாலபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் இதனைத் தொடர்ந்து 9. மணி அளவில் யாக வேள்வி தொடங்கியது. நிகழ்ச்சியில் கணபதி ஹோமம், சாய்நாதர் ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம் தொடர்ந்து பூரண அருள் வேண்டி பூரணாஹூதி நடைபெற்ற பின்னர் தீபா ஆராதனை நடைபெற்றது
நள்ளிரவு 12 மணி அளவில் சிறப்பு மங்கல ஆரத்தி நடைபெற்றது. பின்னர் புத்தாண்டு அன்று காலை 6 மணி அளவில் ஆரத்தி தொடர்ந்து பாலாபிஷேகம் நடைபெற்றது
சிறப்பு யாக பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவின் பஜனை பாடல்களை பாடி சாய்பாபாவை வழிபட்டனர். பின்னர் ஆலயத்திற்கு வந்திருந்த ஏராளமான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் பாபா படத்துடன் நாள்காட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டது
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசிவசாயி சேவா அறக்கட்டளையினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர் மேலும் ஆலயத்திற்கு பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக பெரியபாளையம் ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இலவசமாக வாகனங்கள் இயக்கப்பட்டன..