பூவலை ஊராட்சி மன்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கூச்சல் குழப்பம்

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூவலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கூச்சல் குழப்பத்தால் பாதியில் ரத்தானது.

Update: 2022-04-26 01:15 GMT

பூவலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கூச்சல் குழப்பத்தால் பாதியில் ரத்தானது.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 61 ஊராட்சியில் தேசிய கிராம சபை தினத்தை ஒட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்ற நிலையில் பூவலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கூச்சல் குழப்பத்துடன் பாதியில் தடைபட்டு கிராம சபை கூட்டம் ரத்தானது.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் தேசிய கிராம சபை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி நடராஜன், ஒன்றிய ஆணையர் வாசுதேவன் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்நிலையில் பூவலை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சம்பூர்ணம்மாள் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மகளிர் குழுக்கள், அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு கிராம சபை குறித்த எவ்வித அறிவிப்பும் தெரிவிக்காததை கண்டித்தும், பூவலையில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறியும், ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் பழங்குடியினருக்கு தமிழக முதல்வரின் ஆணைப்படி வீட்டு மனைகள் குறித்து தீர்மானம் இயற்ற வேண்டி இருந்த நிலையில், அருந்ததிய மக்களை ஊராட்சி தலைவரின் மகன்கள் அரசியல் கட்சி கூட்டத்திற்கு அழைத்து சென்றதாக கூறி அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்து கூச்சல் எழுப்பினர்.

இதனால் அங்கு கூச்சல் குழப்பம் எழும்பிய நிலையில், கிராம சபை கூட்டத்தை தொடர்ந்து நடத்த ஊராட்சி தலைவரால் இயலாத நிலையில் கூட்டம் பாதியிலே நிறுத்தப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் நிறுத்தப்பட்ட கூட்டத்தை கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் தனியாக நடத்த வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News