தொடர்கொள்ளை: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்

பெரியபாளையம் அருகே தொடர் கொள்ளை சம்பவங்களை கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-01-07 10:15 GMT

கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்களிடம் பேச்சு நடத்திய காவல்துறையினர்

பெரியபாளையம் அருகே தொடர் கொள்ளை சம்பவங்களை கண்டித்து வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தொடர் கொள்ளை சம்பவங்களை கண்டித்து வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னிகைப்பேர் கிராமத்தில் கடந்த 1மாதமாக தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. நேற்றிரவு ரங்கராஜன் என்பவர் கன்னிகைப்பேர் பஜார் பகுதியில் மருந்தகம் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று இரவு 10 மணி அளவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து ஹெல்மெட் அணிந்து வந்த நபர் ஒருவர் மருந்தகத்தின் பூட்டை உடைக்க முயற்சித்துள்ளார். 

இந்தக் கடையின் எதிரே உள்ள வீட்டில் உள்ளவர்கள். இதனைக் கண்டு கூச்சலிட்டார். அப்போது அங்கு வந்த மரபு நபர் அவரது இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றார். இதுகுறித்து கடையின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்த பின்னர்  பெரியபாளையம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது..

ஹெல்மெட் அணிந்த மர்ம ஆசாமி ஒருவர் கடையின் பூட்டை உடைக்க முயற்சி செய்த பின்னர், அங்கிருந்து தப்பி செல்கிறார் என்பது தெரிய வந்தது.  இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதனிடையே கடந்த 1 மாதமாக நடைபெற்று வரும் தொடர் கொள்ளை சம்பவங்களை தடுக்க வலியுறுத்தியும் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்காத பெரியபாளையம் போலீசாரை கண்டித்து வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதாகவும், காவல்துறையினர் கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும்.  இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி  இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி, பெரியபாளையம் காவல்துறை ஆய்வாளர் வெங்கடேசன், எஸ்ஐ-வினோத்குமார் மற்றும் போலீசார் வியாபாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Tags:    

Similar News