பெரியபாளையம் அருகே குட்கா பொருட்கள் விற்பனை: கடை உரிமையாளர் கைது
பெரியபாளையம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.;
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கொசவன் பேட்டை கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ரத்தினம் (வயது 55). இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக பெரியபாளையம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் துணை ஆய்வாளர் முனிரத்தினம் தலைமையில் போலீசார் நேற்று திடீரென ரத்தினம் என்பவரின் கடையில் சோதனை மேற்கொண்டார். அப்பொழுது கோணி பையில் சுமார் 150 க்கு மேற்பட்ட ஆன்ஸ், விமல் பாக்கு, உள்ளிட்ட பாக்கெட்கள் பத்தாயிரம் மதிப்பிலான போதை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் ரத்தினத்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், தமிழக அரசு குட்கா பொருட்களை தடை செய்தும் கள்ள சந்தையில் தாராளமாக போதை பொருட்கள் கிடைப்பதாகவும், குறிப்பாக படிக்கின்ற இளைஞர்களை குறி வைத்து இதுபோன்ற பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆராணி, பெரியபாளையம், தண்டலம், ஊத்துக்கோட்டை, பாலவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் குட்கா போதை பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி இதுபோன்று போதை பொருட்கள் விற்பருவுமீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..