ஆந்திராவில் இருந்து சென்னை கடைக்கு வந்த சந்தன கட்டைகள்: 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடைக்கு வந்த சந்தன கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேர் கைது செய்தனர்.

Update: 2022-04-11 05:00 GMT

ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 50கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல். 3பேரை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் போலீசார் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை மடக்கி சோதனை மேற்கொண்டதில் உரிய ஆவணங்களின்றி அட்டைப் பெட்டியில் துண்டு துண்டுகளாக சந்தன கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சுமார் 50கிலோ சந்தன கட்டைகளை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சந்தன கட்டைகள் கடத்தி வந்த சர்பாஸ் அலி, அரப்பஸ், நசீர் அஹம்மது ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக ஆந்திராவில் உள்ள கோவிலில் இருந்து சென்னையில் உள்ள கோவிலுக்கு அவற்றை கொண்டு செல்வதாக கூறிய நிலையில் போலீசார் விசாரணை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News