கோவில் நிர்வாகத்தில் ரூ.1 கோடி ஊழல்.. சுவரொட்டிகளால் பரபரப்பு
Tiruvallur News -கோவில் நிர்வாகத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றதாக இரவோடு இரவாக ஓட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tiruvallur News - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் சுமார் 10,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் புது கும்மிடிப்பூண்டி பகுதியில் சுமார் இருபதுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த திருகோவில்கள் இப்பகுதியில் உள்ளன.
இதில் பாலீஸ்வரன் கோவில் சந்திரசேகர சுவாமி கோவில் சன்ன கேசவ பெருமாள் கோவில் எல்லையம்மன் கோவில் உள்ளிட்ட நான்கு கோவில்கள் அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவிலில் வரும் 1 /02/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில் அறநிலை துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த கோவிலில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை ஊழல் அரங்கேறியாக இரவோடு இரவாக புது கும்முடிபூண்டியின் பல முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டப்பட்டதால் அப்பகுதியில் கும்மிடிப்பூண்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது அந்த சுவரொட்டியில் கோவில் நிர்வாகத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஊழல், மௌனம் காக்கும் இந்து அறநிலை துறை, ஆதாரங்களுடன் விரைவில் மக்கள் மன்றத்தில், தர்மகத்தாவை காப்பாற்றும் நபர் யார் என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டி தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் பல சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விவாதப் பொருளாக மாறி உள்ளது.
மேலும் கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெற்ற சில தினங்களே உள்ள நிலையில் கோவில் நிர்வாகத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றதாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவு வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2