பழுதடைந்த ஊராட்சி மன்ற கட்டிடம் அகற்றி புதிய கட்டிடம் கட்டி தர கோரிக்கை

புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஸ்ரீதரன் கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2024-07-05 08:03 GMT

பழுதடைந்த நிலையில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடம்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஈகுவார் பாளையம் ஊராட்சியில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர், இந்த ஊராட்சி மக்கள் தாங்கள் பகுதியில் உள்ள குறைகளை கூற தேவையான அடிப்படை வசதிகளுக்கு மனு கொடுக்க நாள்தோறும் இந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து செல்வார்கள். அப்படி வந்து செல்லும் இந்த ஊராட்சி மன்ற கட்டிடம் மிகவும் பழுதடைந்து மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிந்த படி அச்சுறுத்தும் வகையில் உள்ளது. மேலும் இந்த ஊராட்சி மன்ற கட்டிடம் கடந்த 1990 ஆம் ஆண்டு கட்டப்பட்டு பழைய கட்டிடமாக மாறிய நிலையில் அதனை சீரமைத்து ஊராட்சி அலுவலகப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கட்டிடம் மேலும் சேதமானதால் பாதுகாப்பு கருதி ஊராட்சி மன்றம் நூலக கட்டிடத்தில் தற்போது சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது.


இந்த நிலையில் ஊராட்சி மன்றம் புதிய கட்டிடம் கட்டி தர பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை எனவும், தற்காலிகமாக அந்தக் கட்டிடத்தில் தபால் நிலையம் செயல்படுவதாகவும், ஊராட்சி பணிகளை சிறப்பாக செய்யும்வகையில் தனியாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் DHAசுமார் 40 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறந்துவைக்கப்பட்ட நிலையில் தற்போது வரை கால்நடை மருந்தகத்தில்போதிய கால்நடை மருத்துவர்கள்நியமிக்காமல்  எப்போதும் பூட்டி வைக்கப்பட்ட நிலையில் கால்நடை மருத்துவமனை கட்டிடம் உள்ளது.

இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் விவசாயிகள் மருத்துவமனைக்கு கால்நடைகளை சிகிச்சைக்கு கொண்டு வர முடியாமல் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.கால்நடை மருந்தக கட்டிடம் மது அருந்திவிட்டு மது பாட்டில்களை வீசிசெல்லும் இடமாக மாறி உள்ளதாகவும்,அப்பகுதி மக்கள் வேதனை.தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் உஷாஸ்ரீதரன் தெரிவிக்கையில் பெண்கள் ஊராட்சி மன்றங்களில் தலைவராக பணிபுரியும் ஊராட்சிகளுக்கு  உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை எனவும், அவர்களின் கோரிக்கைகள் கூட நிறைவேற்றுவதில்லை என்றும்,தெரிவித்த அவர் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதற்கும் கால்நடை மருந்தகம் செயல்படவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசு முன்வர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News