கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்டுத்தர கோரிக்கை

கும்மிடிப்பூண்டி அடுத்த நேமலூர் ஊராட்சியில் 84 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை மீட்டுத்தர மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-07-03 01:30 GMT

கும்மிடிப்பூண்டி அடுத்த நேமலூர் ஊராட்சியில் ரூ. 84 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக புகார்.

கும்மிடிப்பூண்டி அருகே நேமலூர் ஊராட்சியில் பல கோடி மதிப்புள்ள அரசு நிலம் அபகரிப்பு என்றும், வீட்டு மனை பிரிவுகளாக விற்பனை அரசு அதிகாரிகள் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், மாதர் பாக்கம் அடுத்த நேமலூர் ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் 70 ஆண்டுகளுக்கு முன்பாகவே பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மஜிகுளம், ரோஸ்னா நகரம், பாதிரிவேடு காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமப்புற மக்களுக்கு ஊராட்சிகள் சார்பாக குடிநீர், சாலை தெரு, விளக்கு உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டினை ஊராட்சி நிர்வாகம் செய்து தரப்படுகிறது.

இந்த நிலையில் நேமலூர் ஊராட்சியில் இருந்து ஆந்திர மாநிலம் சத்தியவேடு செல்லும் வரை சுமார் 250 ஏக்கர் அரசுக்கு சொந்தமான தரிசு நிலம் இருந்து வந்தது. இந்த நிலத்தை அப்போதைய ஏழை எளிய மக்களுக்கு விவசாயம் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுவதற்காக விடப்பட்டது. அதில் காலப்போக்கில் ஒரு சிலர் சாலை ஓரமாக வீடு கட்டியுள்ளார்கள் பின்னர் அரசியல் செல்வாக்கு காரணமாக ஒரு சிலருக்கு பட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் 60 ஏக்கர் அரசு நிலம் பயன்படுத்தப்படாமல் தரிசாக இருந்ததால் மீண்டும் அரசே அந்த நிலங்களை கையகப்படுத்தியதாக 2004 ஆண்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் 61 ஊராட்சிக்கான அலுவலகமாக கோட்டக்கரை பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்திற்கு கரடிபுத்தூர், கண்ணன்கோட்டை,சிறுவாடா, பாலவாக்கம், நெல்வாய், முக்கரம்பாக்கம், மாதர்பாக்கம், நேமலூர், பூதூர் ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்கள் தேவைகளுக்கு சுமார் 25கிலோமீட்டர் தொலைவில் சென்று தான் அரசு திட்டங்களுக்கு பிடிஒவை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வந்துள்ளது.

இதை கருத்தில் கொண்டு பஞ்சாயத்துகளை உள்ளடக்கி மாதர் பாக்கம் மையப் பகுதியாக பிடிஒ அலுவலகமாக செயல்பட வேண்டுமெனவும் அப்போதைய கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கையை ஏற்று 20 வருடங்களுக்கு முன்பு உள்ள சட்டமன்ற உறுப்பினர் அதை வடிவமைத்து அரசுக்கு அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு இடையே 60 ஏக்கர் தரிசு நிலங்களை அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள், வசதி படைத்த பணக்காரர்கள் அந்த மேற்கண்ட நிலங்களை அவர்கள் மடக்கி முள்வேலி அமைத்தும் அதில் மாந்தோப்பு, தேக்கு, செம்மரம், தைல மரம் வளர்ந்து கேட் அமைத்து அதில் இரவு நேரங்களில் சீட்டு விளையாடி, மது அருந்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேற்கண்ட 60 ஏக்கர் தரிசு நிலத்தில் ஓராண்டுக்கு முன்பு ஒரு சிலர் பணத்திற்கும் கைமாற்றி நேமலூர் விஏஓ, வருவாய் ஆய்வாளர், பாதிவேடு காவல் முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஆகிய அரசு அதிகாரிகள் உதவியுடன் வீட்டுமனைகளாக இரண்டு ஏக்கர் பிரித்து அதில் இரண்டு சென்ட் ஆக நிலத்தை கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு லட்சக்கணக்கில் விட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டருக்கு புகார் மனு அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் வட்டாட்சியர் ப்ரீத்தி விசாரணை செய்ததாக கூறப்படுகிறது ஆனால் அந்த விசாரணை முழுமை பெறாமல் இருப்பதால் மேலும் மேலும் அரசுக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலத்தை சிலர் ஆங்காங்கே ஆக்கிரமித்துடன் வருவாய்த்துறை இனைந்து தடையில்லா சான்று வழங்க பெற்று பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதே நிலைமை நீடித்தால் நேமலூர்- சத்தியவேடு செல்லும் சாலை ஓரமாக உள்ள 84 கோடி மதிப்புள்ள நிலத்தை அனைத்தையும் மாற்றி விற்று விடுவார்கள் எனவும் உடனடியாக தற்பொழுது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரடியாக இடத்தை ஆய்வு செய்து. அந்த அரசு நிலத்தை கைப்பற்றி மாதர்பாக்கம் பிடிஒ அலுவலகம் கட்டுவதற்காகவும் தமிழ்நாடு ஆந்திர மாநிலம் இணைக்கும் பகுதியில் உள்ள இந்த இடத்தில் பல அரசு கட்டிடங்கள் கட்டி பயன்பெறலாம் என அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News