பெரியவண்ணாங்குப்பத்தில் அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை.

வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருவதால் புதிய கான்கிரீட் கட்டிடம் கட்டித் தர வேண்டுமென வலியுறுத்தல்;

Update: 2022-09-04 12:15 GMT

பெரியவண்ணாங்குப்பத்தில் சேதமடைந்ததால் மூடப்பட்டுள்ள அரசு அங்கன்வாடி மையம் 

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அடுத்த பெரிய வண்ணங்குப்பம் கிராமத்தில் சுமார் 2000 க்கு 200 மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இந்த கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்ட் ஓடு போட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையத்தில் சுமார் 25 கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் பயின்று வந்த நிலையில் தற்போது கட்டிடம் பழுதடைந்து ஆங்காங்கு விரிசல் மேற்கூரை தளம் கான்கிரீட் பூசுகள் பெயர்ந்து நிலையில் மூடப்பட்டு அருகாமையில் உள்ள வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

எனவே இந்த பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கான்கிரீட் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News