பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயிலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அகற்றம்

பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயில் நுழைவாயிலில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை இந்து சமய அறநிலையத்துறையினர் அகற்றினர்.;

Update: 2021-08-04 11:50 GMT

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோயிலின் நுழைவாயிலின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு திருக்கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்கள், இதர பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு தொடர்ந்த நிலையில் இன்று அறநிலைத் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டனர்.

அப்போது உரிய அனுமதியின்றியும் முன்னறிவிப்பின்றி கடைகளை அகற்ற போவதாக கூறி ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..

Tags:    

Similar News