பாதிரிவேடு கிராமத்தில் பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவிகள்

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 600 பழங்குடியினர் குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது;

Update: 2021-12-07 08:30 GMT

பாதிரிவேடு பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

சென்னை சமூக சேவை சங்கத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 600 பழங்குடியினர் குடும்பத்திற்கு மழைக்கால நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. சென்னை சமூக சேவை சங்கத்தின் இயக்குனர் பாதிரியார் எம்.வி.ஜேக்கப் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில் பாதிரிவேடு ஊராட்சி மன்ற தலைவர் என்.டி. மூர்த்தி, மாநெல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ், பாதிரிவேடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஈஸ்வரி பாலசுப்ரமணியம், ஒன்றிய கவுன்சிலர்கள் சிட்டிபாபு ,சிவா, மாதர்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உதவி மேலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் டி. ஜெ.எஸ் கல்வி குழும இயக்குனர் டி.ஜெ.ஜி. தமிழரசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார் .

தொடர்ந்து நிகழ்வில் பாதிரிவேடு, மாதர்பாக்கம், போந்தவாக்கம், கண்ணம்பாக்கம் சாணாபுத்தூர், பூவலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 600 பழங்குடி இன குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரண உதவியாக அரிசி, மளிகை பொருட்கள், போர்வை, பாய் உள்ளிட்டவைகள் சென்னை சமூக சேவை சங்கத்தின் சார்பிர் டி.ஜெ.எஸ் கல்வி குழும இயக்குனர் டி.ஜெ. ஜி. தமிழரசன் வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது சென்னை சமூக சேவை சங்கத்தின் மூலம் பழங்குடியினருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டதோடு, வெளியே செல்லும் போது முக கவசம் அணிந்து செல்லவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். மேலும் சென்னை சமூக சேவை சங்கத்தின் மூலம் விரைவில் பழங்குடியின மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது என்றும் தெரிவித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னை சமூக சேவை சங்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் இயேசு ராஜா, பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் டி.எஸ்.கவிதா, ஷோபா, கூட்டமைப்பு தலைவிகள் ஜெயமாலை, சுந்தரம்மாள் உள்ளிட்டோர் முன்னின்று சிறப்பாக நடத்தினர்கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு கிராமத்தில் சென்னை சமூக சேவை சங்கம் சார்பில் பழங்குடியினர் 600 பேருக்கு நலத்திட்ட உதவிகளை டி.ஜெ.ஜி. தமிழரசன் வழங்கினார்

Tags:    

Similar News