ஆரம்பாக்கத்தில் தனியார் வங்கியை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஆரம்பாக்கம் பகுதியில் தனியார் வங்கியை கண்டித்து பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் தனியார் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் அதிகாரிகள் பொதுமக்களை மரியாதை குறைவாக பேசுவதை இன்று கண்டித்து பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக தாசில்தார், இன்ஸ்பெக்டர் ஆகியோர் சமாதானப்படுத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.