பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட கோரிக்கை
பெரியபாளையம் காவல்துறையினரால் பல்வேறு குற்ற செயல்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்த வாகனங்கள் துருப்பிடித்து வீணாகும் அவலம். ஏலம் விட பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம் காவல் நிலை எல்லைக்கு பல்வேறு பகுதிகளில் மது கடத்தல், மணல் திருட்டு, கஞ்சா கடத்தல், விபத்து உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் பிடிபடும் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடம் வசதி இல்லை. இதன் காரணமாக பெரியபாளையம் காவல் குடியிருப்பு ஆரணி பெரியபாளையம் சாலை அருகிலும் மீதமுள்ள இரு சக்கர வாகனம் மாட்டு வண்டிகள் ஆட்டோ லாரி உள்ளிட்டவை குடியிருப்பில் பின்புறம் உள்ள இடத்தில் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
போதிய பாதுகாப்பு இல்லாததால் வாகனங்கள் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து துருப்பிடித்து வீணாகிறது. மேலும் வாகனங்கள் நிறுத்தி உள்ள இடத்திற்கு அருகாமையில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளது. நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் பாம்பு பூச்சிகள் வந்து சேர்ந்து விடுகின்றன சில நேரங்களில் வீடுகளுக்குள்ளும் காவல் குடியிருப்புகளிலும் விஷம் நிறைந்த பாம்புகள் வருவதாகவும் மக்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்
மேலும் லாரி,ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் காவல் குடியிருப்பு முன் பெரியபாளையம் ஆரணி சாலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாத காரணத்தினால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சில நேரங்களில் அருகில் உள்ள லாரி, ஜேசிபி உள்ளிட்டவை மீது மோதி விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது.
எனவே பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை முறையாக ஏலம் விட்டால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்றும் இதனால் ஆபத்துகளையும் தவிர்க்கலாம் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்
எனவே இதனை மாவட்ட நிர்வாகம் கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.