கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் முற்றுகை

Public Demanded Tasmac Shop Removal கும்மிடிப்பூண்டி அருகே அரசு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-12-10 05:00 GMT

Public Demanded Tasmac Shop Removal 

கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு .திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சியில் 3000-த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு பொதுமக்கள் தங்கள் தேவைக்காக தினந்தோறும் தொழிற்சாலை, பள்ளம் தோன்றுதல், எலக்ட்ரிஷன், அரசு வேலை,விவசாயம் கால்நடை வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை மேற்கொண்டு செய்துள்ளனர்.இந்த நிலையில் தேர்வழி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு திறக்கப்பட்டது.

அப்போது இந்த மது கடைகளில் தினந்தோறும் தேர்வழி ஊராட்சியைச் சேர்ந்த கிராம இளைஞர்கள் மேற்கண்ட பணிகளுக்கு செல்லாமல் காலை முதல் மாலை வரை குடித்துவிட்டு சண்டையிடுவதும் அங்கேயே உறங்கிக் கொள்வதும் வழக்கமாகியது.இதனால் பெற்றோர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் இரண்டு முறைக்கு மேல் மேற்கண்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.ஆனால் அதிகாரிகள் இதுவரை டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஓராண்டுகளாக மேற்கண்ட மதுபான கடையில் இரவு 10 மணிக்கு சில மரம நபர்கள் குடித்துவிட்டு வீட்டை உடைத்து பணம், நகை மற்றும் இரு சக்கர வாகனம் ஆகிய பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.அது மட்டுமல்ல ஏற்கனவே ஊராட்சி சார்பாக கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில்  இதுகுறித்து புகார் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்பு மூன்று மாதங்களுக்கு முன்பு ஜட்டி திருடர்கள் வீடுடை உடைத்து இரண்டு சவரன் நகை பணம் கொள்ளை அடித்து சென்றனர் இது நாள்  வரை மர்ம நபர்கள் போலீஸ் வலையில் சிக்காத நிலையில் நேற்று திருடர்கள் மேற்கண்ட ஊராட்சிகளில் இரவு நேரங்களில் கொள்ளை முயற்சி ஈடுபட்டு அறிந்த ஊராட்சி மக்கள் டாஸ்மாக் கடை முன்பு நேற்று முற்றுகையிட்டு கடையை அகற்றக்கோரி சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதை அறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் இது சம்பந்தமாக மாவட்ட மேலாளர் மற்றும் வருவாய்த் துறையிடம் கலந்து ஆலோசித்து உடனடியாக மதுபான கடையில் அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் கூட்டம் கலைந்து சென்றது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News