ஊத்துக்கோட்டை ஜமாபந்தி நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஊத்துக்கோட்டை ஜமாபந்தி நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.;

Update: 2023-06-16 04:15 GMT

ஊத்துக்கோட்டை ஜமாபந்தி நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை வருவாய் தீர்வாயம் சார்பாக திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில் கடந்த 6-ம் தேதி ஜமாபந்தி நிகழ்ச்சி துவங்கி நேற்று நிறைவு பெற்றது.

இதில், இணைய வழிபட்டா,இலவச வீட்டு மனை பட்டா,முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை, புதிய மின்னணு குடும்ப அட்டை, இந்து-இருளர் பழங்குடியினர் நல வாரிய அட்டை,வாரிசு சான்று, விதவை சான்று, சிறு விவசாயி சான்று, உட்பிரிவு பட்டா மாறுதல்,முழு புலம் பட்டா மாறுதல் என மொத்தம் 313 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 21 லட்சத்து 94ஆயிரத்து 868 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு,திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான்வர்கீஸ் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.சப்-கலெக்டர்(பயிற்சி) சுபலட்சுமி முன்னிலை வகித்தார்.

தனி வட்டாட்சியர் லதா,வட்ட வழங்கல் அலுவலர் ரவி,கிராம நிர்வாக அலுவலர் சுந்தர்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஊத்துக்கோட்டை பேரூர் கழகச் செயலாளர் அபிராமி, பேரூராட்சிமன்ற தலைவர் அப்துல்ரஷீத், துணைத் தலைவர் குமரவேல் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அனைவரையும் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் வசந்தி வரவேற்றார். முடிவில், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஹேமகுமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News