அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கோடு வெளி அருகே உள்ள 5 பள்ளிகளில் படுகின்ற 300 மாணவர்களுக்கு ஒன்றிய கவுன்சிலர் எம்.குழந்தைவேலு நலத்திட்டங்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றிய 19-வது வார்டுக்கு உட்பட்ட மாகரல், மாகரல்கண்டிகை, கோடுவெளி, லட்சுமிநாதபுரம், காரணி ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் படிக்கும் சுமார் 300 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆர்.எம்.கே.கல்விக் குழுமம் மற்றும் எல்லாபுரம் ஒன்றிய 19-வது வார்டு உறுப்பினர் கோடுவெளி எம்.குழந்தைவேலு இணைந்து பள்ளி மாணவர்களுக்கு எவர்சில்வர் வாட்டர் பாட்டில், பேக்,ஏழு நோட்டு உள்ளிட்ட உபகரணங்களை ரூ.1.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளுக்கு,ஊராட்சிமன்ற தலைவர் குமுதாசெல்வம் தலைமை தாங்கினார். பூபாலன், முனிவேல், கணேசன், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் ஒன்றிய 19-வது வார்டு உறுப்பினர் கோடுவெளி எம்.குழந்தைவேலு கலந்து கொண்டு மேற்கொண்ட அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை நலத்திட்ட உதவியாக வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், மாணவர்கள் எதைப்பற்றி சிந்திக்காமல் படிப்பு மட்டுமே தாங்கள் லட்சியமாக நினைத்து படிக்க வேண்டும். உலகத்தில் எத்தனையோ அரசு பள்ளி மாணவர்கள் பெரிதளவில் சாதித்துள்ளார, நன்றாக படித்து நாட்டுக்கும் ஊருக்கும் பெற்றோர்களுக்கும் நல்ல பெயர் உருவாக்கி தனக்கண்டு அடையாளம் இருக்க வேண்டும் என்றும் அவர் பேசினார்.
எந்த உதவி இருந்தாலும் தன்னை நாடினால் மாணவர்களுக்கு உதவி செய்ய தன் தயாராக இருப்பதாக தெரிவித்தார். முன்னதாக அனைவரையும் தலைமை ஆசிரியர்கள் விஜயாசுமதிசினேகலதா, அன்னக்கொடி ஆகியோர் வரவேற்றனர்.
முடிவில், பட்டதாரி ஆசிரியை புஷ்பலதா, இடைநிலை ஆசிரியர்கள் குமரேசன், பிரபாகரன் ஆகியோர் நன்றி கூறினர்.