சித்தராஜ கண்டிகை ஊராட்சியில் விவசாயிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கல்

விழாவில் கைத்தெளிப்பான், பச்சைப்பயறு பழமரக்கன்றுகள், மண்புழு உரம், ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

Update: 2022-05-30 01:30 GMT

சித்தராஜ கண்டிகை ஊராட்சியில் விவசாயிகளுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வேளாண் உழவர் நலத்துறை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2021--2022 ஆம் ஆண்டுகளுக்கான முகாமை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சித்தராஜ கண்டிகை ஊராட்சியில் வேளாண்துறை தோட்டக் கலைத்துறை சார்பில் விவசாயி களுக்கு விசைத் தெளிப்பான், பேட்டரி விசைத்தெளிப்பான், கைத்தெளிப்பான், பச்சைப்பயறு பழமரக்கன்றுகள், மண்புழு உரம், ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர் ஜெயசந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாமுரளி, மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News