கும்மிடிப்பூண்டி: பட்டா கேட்டு நரிக்குறவர் இன மக்கள் போராட்டம்

கும்மிடிப்பூண்டியில் நரிக்குறவர் இன மக்கள் பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2022-03-22 04:45 GMT

அடிப்படை வசதிகள் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள். 

திருவள்ளூர் மாவட்டம்,  கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 11வது வார்டில், 60 வருடங்களாக 23 நரிக்குறவ இன குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் ஒரு சில குடும்பங்களுக்கு மட்டும் பட்ட தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,  மற்ற குடும்பங்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும், அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும்,  பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர் இன மக்கள், பேரூராட்சி செயலர் யமுனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பேரூராட்சி தேர்தலுக்கு முன்னதாக பலமுறை வழங்கப்பட்ட மனுக்களை ஊராட்சி செயலர் யமுனா வாங்க மறுத்ததாகவும் வாங்கிய சில மனுக்களை நரிக்குறவர் இன மக்கள் கண்முன்னே கிழித்து போட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,  நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்குப் பின்னர் வார்டு உறுப்பினரின் தலைமையில் இன்று,  50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவர் இன மக்களுடன் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பேரூராட்சி தலைவர் ஷகிலா அறிவழகன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் இலவச பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நரிக்குறவர் இன மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News