ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

எல்லாபுரம் ஒன்றிய அலுவலக வாயில் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-12-23 09:15 GMT

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பெரியபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பெரியபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் மதியம் உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில்,ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 50 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.மக்கள் நலப் பணியாளர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் ந.பொன்னரசு தலைமை தாங்கினார்.ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க வட்ட கிளை தலைவர் உமாநாத்,வட்ட கிளை செயலாளர் வசந்தகுமார்,வட்ட கிளை பொருளாளர் சரவணன்,சத்துணவு அமைப்பாளர் சங்க தலைவர் சிவலிங்கம்,செயலாளர் தினேஷ்,பொருளாளர் காந்திமதி,மக்கள் நல பணியாளர் சங்க தலைவர் ஹரிச்செல்வம்,செயலாளர் மோகன்,மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சத்துணவு அமைப்பாளர் சங்க மாவட்ட தலைவர் சிவா கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றி பேசினார்.இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில்,ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க வட்ட கிளைச் செயலாளர் வசந்தகுமார் நன்றி கூறினார்.

Similar News