திருவள்ளூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
திருவள்ளூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.;
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் சூளைமேனி காலனி பகுதியில் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சுமார் 150 பேர் பணி செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக 100 நாள் வேலை வழங்குவதில்லை என்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கப் படவில்லை என கூறப்படுகிறது. நேற்று கிராம மக்கள் ஒன்று கூடி எல்லாபுரம் வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சிகள் ஸ்டாலினிடம் தெரிவிக்க வந்தபோது சரியான பதில் அளிக்கவில்லை என்று ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.