கும்மிடிப்பூண்டி அருகே தனியார் பள்ளியை மூடுவதற்கு எதிராக போராட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் பள்ளியை மூடுவதற்கு எதிராக பெற்றோர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.;

Update: 2023-06-04 10:24 GMT
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் பள்ளி மூடப்படுவதற்கு எதிராக பெற்றோர் போராட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி அருகே மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் தனியார் பள்ளி மூடப்பட்டது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் படித்து வந்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்  என பள்ளியை திறக்க பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கவரப்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான ஆர்.ஏ.என் என்ற தனியார் பள்ளி இயங்கி வந்தது. இப்பள்ளியில் 1.முதல் 5 ஆம் வகுப்பு வரை சுற்று வட்டார சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவி மாணவர்கள் பயின்று வந்தனர் . தற்போது இப்பள்ளியில் பொருளாதார நெருக்கடி மற்றும் குறைந்த மாணவர்கள் சேர்க்கையால் மற்ற மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்றதால் பள்ளி நிர்வாகம் பள்ளியை மூட முடிவு செய்தது. இப்பள்ளியில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் படித்த வந்த ஏழை மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்றால் இந்த சலுகை கிடைக்குமா என்று பெற்றோர்கள் இடையே கேள்வி எழுந்தது.

இதனால் பள்ளியை மூடக்கூடாது என்று பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பெற்றோர்கள் சுமார் 50.க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கவரப்பேட்டை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில் தாங்கள் கூலி தொழில் செய்து வருவதாகவும் தாங்கள் குழந்தைகளுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இடம் கிடைத்து இப்பள்ளியில் நன்றாக பயின்று வருவதாகவும் திடீரென இப்பள்ளி நிர்வாகம் மாணவர்கள் சேர்க்கை குறைந்தது எனக்கு ஒரு பள்ளியை மூடுவதால் தாங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கும் எனவும் பள்ளியை மீண்டும் திறந்து நடத்த வேண்டும் என்று மாணவன் பெற்றோர்கள் தெரிவித்தனர். இதற்கு போலீசார் பிரச்சனைமீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் இந்த பிரச்சனை குறித்து செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்கள் நிருபர்களை பள்ளி நிர்வாகம் தகாத வார்த்தைகளால் திட்டி பள்ளியின் காவலர்களை வைத்து வெளியேற்றியதால் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்து. கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News