கும்மிடிப்பூண்டி அருகே யோகா போட்டியில் தனியார் பள்ளி மாணவர்கள் உலக சாதனை
கும்மிடிப்பூண்டி அருகே யோகா போட்டியில் தனியார் பள்ளி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர்.
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் பள்ளி மாணவர்கள், 175 பேர், தொடர்ந்து ஐந்து நிமிடம், 40 விநாடிகள், பர்வதாசனத்தில் நின்று உலக சாதனை படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியில் டி. ஜே.எஸ். பப்ளிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் யோகா பயிலும் மாணவர்களின் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்வில், 175 மாணவ, மாணவியர், தொடர்ந்து ஐந்து நிமிடம், 40 விநாடிகள், பர்வதாசனம் எனும் யோகாசனத்தில் நின்று உலக சாதனை படைத்தனர். இவர்களது சாதனை, ‛இன்டர்நேஷனல் யோகா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்தது.
சாதனையை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் டி.ஜெ.எஸ்., கல்வி குழும தலைவருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடந்த பரிசளிப்பு விழாவில் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி கலந்து கொண்டு, மாணவர்களுக்கான உலக சாதனை பட்டயங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
பள்ளி நிர்வாகம் மற்றும் யோகா பயிற்சியாளர் சந்தியாவுக்கான பாராட்டு சான்றுகளை, ‛இன்டர்நேஷனல் யோகா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ தீர்ப்பாளர் சிந்துஜா வினித் வழங்கினார்.
இதில் பள்ளி தாளாளர் தமிழரசு, இயக்குனரும் பள்ளியின் செயலாளர் டி.ஜே. ஆறுமுகம், துணைத் தலைவர் டி.ஜே. தேசமுத்து, இயக்குனர்கள் டாக்டர் பழனி, விஜயகுமார், கபிலன், தினேஷ், உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், ஜெயக்குமார், ராஜேஷ், நிர்வாக அலுவலர் ஏழுமலை, முதல்வர்கள் அசோக், டாக்டர் பிரகாஷ், பிச்சைமணி, லட்சுமிபதி, ஞானபிரகாசம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.