கும்மிடிப்பூண்டி அருகே வீடு புகுந்து முதியவர்களை தாக்கி பணம், நகை பறிப்பு

கும்மிடிப்பூண்டி அருகே வீடு புகுந்து முதியவர்களை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-12-08 04:45 GMT

மர்ம நபர்களிடம் பணம், நகையை இழந்த முதியவர்கள்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆரணி ஆரணி அருகே உள்ள மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற நியாய விலை கடை ஊழியர் ஜடராயன் (62). இவரது மனைவி சுலோச்சனா (58) அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார்.

நேற்றிரவு வயதான தம்பதியர் இருவரும் வீட்டில் தரை தளத்தில் தூங்கியுள்ளனர். இவர்களது மகளும், மருமகனும் மேல் தளத்தில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு ஜடராயன் வெளியே பார்த்த போது வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் பீரோவை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது தெரிந்து.

அங்கு சென்றதும் முதியவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரின் மனைவி சுலோச்சனாவையும் தாக்கிவிட்டு அவரது கழுத்தில் இருந்த தாலி சங்கிலி 4.5சவரனை பறித்துள்ளனர். முதியவர்களின் அலறல் சத்தம் கேட்டு மேல் தளத்தில் இருந்தவர்கள் வருவதை பார்த்த மர்ம கும்பல் 4.5 சவரன் தாலி சங்கிலி, பீரோவில் இருந்த 22ரொக்கம் பணத்தை எடுத்து கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் ஆரணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து வீடு புகுந்து முதியவர்களை தாக்கி கைவரிசை காட்டிய 3பேர் கொண்ட கும்பலை  தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News