திருவள்ளூர் அருகே கிணற்றில் ஆண் சடலத்தை கைப்பற்றி போலீஸ் விசாரணை

திருவள்ளூர் அருகே கிணற்றில் ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update: 2023-06-05 06:58 GMT

கிணற்றில் இருந்து முதியவரின் உடலை மீட்கும் பணி நடந்தது.

கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் முதியவர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. முதியவர்  கொலை செய்யப்பட்டாரா?  அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பாதிரிவேடு ஊராட்சிக்கு அருகே உள்ள கரடிப்புத்தூர் என்ற கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பு ஒன்று உள்ளது. இந்த மாந்தோப்பில் தரை கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றில் ஆண் சடலம் ஒன்று கிடந்ததாக அப்பகுதி சேர்ந்தவர்கள் பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதிரிவேடு போலீசார். கிணற்றில் இருந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் இறந்து கிடந்தவருக்கு 60  வயது இருக்கும். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர். பணத்திற்காக யாராவது அவரை கடத்தி கொலை செய்து கிணற்றில் போட்டுவிட்டு சென்றாரா. அல்லது குடும்ப தகராறு காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என தெரியவில்லை.

போலீசார் இது தொடர்பாக ஒரு  வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இறந்த முதியவர் யார் என்பது அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டால் தான் அவர் எப்படி இறந்தார் என்ற முடிவிற்கு போலீசார் வர முடியும். எனவே போலீசார் முதலில் அவர் யார் என்பதை கண்டு பிடிக்கும் முயற்சியில் முதல் கட்டமாக இறங்கி உள்ளனர். இதற்காக அவரது படத்தை பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி விசாரணை நடத்துகிறார்கள்.

Tags:    

Similar News