மகன் கொலைக்கு பழிக்குப்பழி; தந்தையிடம் பறிமுதல் செய்த வெடிகுண்டுகள் செயலிழப்பு
மகன் கொலைக்கு பழிவாங்க ரவுடியின் தந்தையிடம் பறிமுதல் செய்த 2 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் செயலிழக்கச் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கும்புலி கிராமத்தில் கடந்த 3ஆம் தேதி 2 நாட்டு வெடிகுண்டுகளுடன் ரவுடியின் தந்தையான கோதண்டம் (62) என்பவரை ஆரம்பாக்கம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தனது மகனான தினக்குமாரை கொலை செய்தவர்களை பழி வாங்க, திட்டமிட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றித் திரிந்தது தெரியவந்தது.
இந்நிலையில், பிடிபட்ட 2 நாட்டு வெடிகுண்டுகளையும் ஆரம்பாக்கம் போலீசார் நேற்று எளாவூர் அடுத்த ஏழுகிணறு பாலம் அருகே கொண்டு சென்றனர். பின்னர் அங்கு சென்னையை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்களின் உதவியோடு செயலிழக்கச் செய்தனர்.