உரிய அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 15 மாடுகள் பறிமுதல்

ஆந்திராவில் இருந்து உரிய அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 15 மாடுகள் பறிமுதல் - ஒருவர் கைது;

Update: 2021-04-17 10:42 GMT

பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளும் வாகனமும்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் சோதனைச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திர மாநிலத்திலிருந்து இறைச்சிக்காக சென்னைக்கு கொண்டு செல்வதற்காக உரிய அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 15 மாடுகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணை மேற்கொண்டதில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடத்தி வந்த ஒருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News