கும்மிடிப்பூண்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கும்மிடிப்பூண்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2021-12-14 03:15 GMT

கும்மிடிப்பூண்டி பஜாரில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி பஜாரில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நடைபெற்ற இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டாக்டர் காமராஜ் தலைமை தாங்கினார் .உதவி பொறியாளர் சதீஷ், தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவன மேலாளர் இந்திரசேனா முன்னிலை வகித்தனர்.

கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்து கும்மிடிபூண்டி கோட்டக்கரை வரை சென்று மீண்டும் கும்மிடிப்பூண்டி பேரணி பேருந்து நிலையம் வரை இந்த பேரணி நடைபெற்றது. பேரணியின் போது பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்ற தொழிலாளர்களும், சமூக ஆர்வலர்களும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பைகளை பயன்படுத்தும் வகையில் துணிப்பைகளை அனைவருக்கும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் இந்த நிகழ்வில் பேசிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டாக்டர் காமராஜ் கும்மிடிப்பூண்டி பொதுமக்களுக்கு பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்கும் வகையிலும் பிளாஸ்டிக்கை தவிர்த்து பொதுமக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளில் துணிகளால் ஆன பைகளை பயன்படுத்த அறிவுறுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கடைகளுக்கு செல்லும்போது பயன்படுத்தும் வகையில் துணிப்பைகள் வழங்கப்பட்டது என்றும், பல்வேறு நிறுவனங்களின் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு துணிகளால் ஆன பைகளை வழங்கி அவரவர் வீடுகளில் இதனை கடைகளுக்குச் செல்லும்போது பயன்படுத்த மாணவர்கள் மூலம் அறிவுறுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர் ஜான் தியோபிலஸ், தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை சேர்ந்த கணேஷ் மற்றும் மிக்சிலின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News