திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் வளாகத்தில் அரசு தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், நூலக கட்டிடம், இ சேவை மைய கட்டிடம், நியாய விலைக் கடை உன்னிடம் அரசு சார்ந்த கட்டிடங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு மின்மாற்றி சரியான பராமரிப்பு இல்லாததால் அடர்ந்த செடி கொடிகள் படர்ந்துள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் என்ற பெயரில் அதிகாரிகள் எவ்வித பணிகளை செய்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனை சரி செய்ய வலியுறுத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் செடி, கொடிகள் என்பதால் அதில் மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. அந்த வழியாக வரும் பள்ளி மாணவர்களோ அல்லது வயதானவர்களோ செடிகளை தொட்டால் பெரும் ஆபத்துக்கு வழி வகுக்கும். எனவே இந்த மின்மாற்றியில் உள்ள அடர்ந்த செடி கொடிகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலஞ்சிவாக்கம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.