பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அலகு குத்தும் திருவிழா:திரளான பக்தர்கள் பங்கேற்பு
Temple Festival -பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அலகு குத்தும் திருவிழாவில் திரளான பக்தர்கள் அம்மன் வழிபாடு செய்தனர்.
Temple Festival -திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் தொடங்கி 14வாரங்கள் இந்த பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலம் பூண்டிருக்கும்.
ஆடி மாதத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட அண்டை மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாது, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பெரியபாளையம் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தனர்.
இந்நிலையில் 10வது வாரம் உள்ளூர் கிராம மக்களின் 32ஆம் ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் கிராம மக்கள் காவடி எடுத்தபடியும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். உடலில் அலகு குதித்தபடி வாகனங்களில் தொங்கியபடி பறவை காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
மேலும் மலர்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரியபாளையத்துஅம்மன் பெரியபாளையம் சுற்றுவட்டார முக்கிய வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட உள்ளூர் பக்தர்கள் உற்சாகமாக பங்கேற்று அம்மனை வழிபட்டு தரிசனம் செய்து சென்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2