கன்னிகைபேர் ஊராட்சியில் உள்ள பெரியகுளத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை

கன்னிகைபேர் ஊராட்சியில் உள்ள பெரியகுளத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-19 02:35 GMT
சீரமைக்கப்படவேண்டிய பெரியகுளம்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைபேர் ஊராட்சியில் சுமார் 7.ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் கிராம சேவை மையம் கட்டிடம் அருகே உள்ள பெரியகுளம் உள்ளது.

இக்குளத்தின் நீர் கடந்த1980 ஆம் ஆண்டில் கன்னிகைபேர் கிராம பொதுமக்களின் குடிநீர் நீராதாரமாக பயன்படுத்தி வந்தனர்.   தற்போது பெரியகுளம் பராமரிப்பு இன்றி அதில் நாணல்கள் முட்புதர்கள் செடி கொடிகள் வளர்ந்துள்ளது. மேலும் குளத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் இதில் திறந்துவிடப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து கழிவுகளை குளத்தில் கொட்டுவதால் அதிலுள்ள நீர் மாசு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

42 ஆண்டுகளுக்கு முன்பாக மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்த கன்னிகைபேர் பெரிய குளம் கழிவுநீர் குளமாக மாறியுள்ளது இதனை தூர்வாரி கரை பலப்படுத்தி குளத்தின் சுற்றி பூங்கா அமைக்க வேண்டும்  என கன்னிகைபேர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News