நொச்சிக்குப்பத்தில் மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்
நொச்சிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள மதுபானக்கடையை அகற்றகோரி 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே அமைந்துள்ள நொச்சிக்குப்பம் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் இவ்வழியாகச் செல்லும் பெண்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு இல்லை எனவும் இதனால் இந்த கடையை அகற்றக் கோரியும் 100க்கும் மேற்பட்ட நொச்சிக்குப்பம் கிராம மக்கள் கடையின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆரம்பாக்கம் ஆய்வாளர் அய்யனாரப்பன் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜி குழுவினர் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.