அரசு டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நேமலூர் ஊராட்சியில் 2500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அதேபோல் இங்கே தனியார் திருமண மண்டபங்கள், கோவில்கள், அரசு அலுவலகங்கள் என மக்கள் அதிக அளவில் கூட கூடிய இடங்களும் அமைந்துள்ளது.
இந்த நிலையில் குறைந்த பரப்பளவு கொண்ட இந்த ஊராட்சியில் ஏற்கனவே மூன்று அரசு மதுபான கடைகள் உள்ளன. இதை சார்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் சட்ட விரோத பார்களும் இரவு பகலாக இயங்கி வந்தது.
இதனால் மது பிரியர்கள் மதுவை அருந்தி விட்டு சாலையோரம் மயங்கி நிலையில் கிடப்பது, அவ்வழியாகச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவியரிடம் மற்றும் பெண்களிடமும் ஆபாசமாக பேசுவது, அடிக்கடி சண்டை சச்சரவுகள் என பல்வேறு இன்னல்களுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகி வருவதாகவும், இந்த நிலையில் சிரிய ஊராட்சியான நேமலூர் ஊராட்சியில் மூன்று அரசு மதுபாரம் கடைகளை தாண்டி நான்காவதாக மேலும் ஒரு அரசு மதுபான கடை அமைக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அருகிலுள்ள பெங்களூர் ஊராட்சி சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களும், இளைஞர்களும் ஒன்று திரண்டு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்க வந்தபோது அலுவலக அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் காத்திருக்க வைத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென வட்டாட்சியர் அலுவலகம் வயலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளே நுழைந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வட்டாட்சியர் சரவணக்குமாரி அவர்களை அழைத்து விசாரணை செய்து அதன் பின்னர் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி சுமூகத்தீர்வு காண்பதாகவும் வாக்குறுதி அளித்தார் அது தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.