பெரியபாளையம் பார்வதி தேவி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா

பெரியபாளையம் பார்வதி தேவி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா மிக சிறப்பாக நடந்தது.

Update: 2022-04-17 03:40 GMT
பெரியபாளையம் பார்வதி தேவி திட்டிஅம்மன் கோவில் சித்ரா பவுர்ணமி விழாவில் பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் டாக்டர் அம்பேத்கர் நகரில் அருள்மிகு ஸ்ரீ பார்வதி தேவி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் ஏந்திய வண்ணம் ஊர்வலமாக இக்கோவிலுக்கு வந்தனர்.

இதன் பின்னர், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நாலாம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டும் கோவில் வளாகத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. மூலவர் அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர்,மூலவருக்கு சிறப்பு அலங்காரம்,மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.


மாலை பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராஜா,விஜயன் கிராம பெருத்தனகாரர்கள் ரவகண்ணு,பாளையம், பாலன்,சௌந்தரராஜன்,ஞானம்,நிர்வாகிகள் பாபுஜி,ராஜி, மகாலிங்கம் ஆகியோர் தலைமையில் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News