பன்னூர் விநாயகர் கோவிலுக்கு கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. ரூ.1லட்சம் நன்கொடை

Temple Donation - பன்னூர் விநாயகர் கோவிலுக்கு கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. ரூ.1லட்சம் நன்கொடை வழங்கினார்.;

Update: 2022-09-01 04:30 GMT

பன்னூர் விநாயகர் கோவிலுக்கு கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார்.

Temple Donation -திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மாதர்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பன்னூர் கிராமத்தில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேற்று காலை யாகசாலை பூஜைகள் நடந்து முடிந்த பின்னர் புரோகிதர்கள் யாகசாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை ஆலய கோபுர கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன் கலந்து கொண்டார். இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாதர்பாக்கம் ஜே.மோகன் பாபு ஏற்பாட்டில் கோவிலுக்கு நன்கொடையாக ஒரு லட்சம் ரூபாயை எம். எல். ஏ. விடம் வழங்கி அவர் மூலமாக கிராம பெரியோர்கள் முன்னிலையில் கோவில் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. பின்னர் சிறப்பு அழைப்பாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் கழகச் செயலாளர் மணிபாலன், ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன்,முரளி அண்ணன், ரேவதி, கீதா ,பாபு ,பாஸ்கர், யஷ்வந்த் குமார், ஆர்கிடெக் மணி, கார்த்திக், மணிகண்டன், லோகேஷ், மாநெல்லூா் பாலச்சந்தர் தேவன்பு ,சந்திரன் பொடிக்கர் ராஜா,மாரிமுத்து ,மற்றும் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News