கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பால்குடம் வழிபாடு
தீமிதி திருவிழாவை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி மேட்டு காலனி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பால்குடம் சுமந்து வழிபாடு நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி மேட்டுகாலனி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டு காலனி பகுதியில் பிரசித்தி பெற்ற கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தின் இந்த தீ மிதித் திருவிழா முன்னிட்டு வருடம் தோறும் பால்குடம் எடுத்து விழா நடத்துவது வழக்கம். அதைத் தொடர்ந்து ஒன்பதாம் ஆண்டு பால்குடம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி பஜார் முருகன் கோவில் இருந்து பக்தர்கள் தலையில் பால் குடங்களுடன் சுமந்தபடி மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.
அப்போது பக்தர்கள் பரவசமடைந்து ஆடிக்கொண்டு மேட்டு காலனி கன்னிகா பரமேஸ்வரர் கோயிலை சென்றடைந்தனர். இதில் பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தொடர்ந்து தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், ஜவ்வாது, தேன்,மஞ்சள், குங்குமம், திருநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதன் பின்பு சூரிய, சந்திர வழிபாடு,மலர் அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது தொடர்ந்து ஆலய வளாகத்தில் யாக குண்டம் அமைத்து சிறப்பு ஹோமமும் நடைபெற்றது. இந்த பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இதில் மேட்டு காலனி, ஜெயஸ்ரீ நகர், நங்க பள்ளம், குருவாட்டுச்சேரி, வெட்டு காலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டது சாமியாரசனும் செய்தனர்.