சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் அதிகாரிகள் ஆய்வு
சத்தியமூர்த்தி நீர்த்தேக்க பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் தற்போது கிருஷ்ணா நதி நீரானது 350 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. தற்போது சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் 20 அடி உயரத்திற்கு நீர் தேங்கி இருக்கும் நிலையில் உள்ள அணையில் உள்ள 16 இரும்புக் கதவுகள் மற்றும் 14 இரண்டு பெரிய இரும்பு கதவுகள் இருக்கின்றன.
சிறிய வகை இரும்புக் கதவுகளை மாற்றி புதிய கதவுகள் மாற்றும் பணி நடைபெற்று வந்த நிலையில், கிருஷ்ணா நதி நீர் பூண்டி நீர்தேக்கத்திற்கு வரத்தொடங்கியது. இதனால், தண்ணீரில் நீர்மட்டம் உயரவே, கதவுகளை மாற்றும் பணி நிறுத்தப்பட்டிருக்கிறது என்று பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவற்றைப் பார்வையிட தமிழக நீர்வள ஆதார துறை தலைமை பொறியாளர் ரவீந்திர பாபு மற்றும் செயற்பொறியாளர் கொசஸ்தலை ஆறு உட்கோட்டம் உதவி செயற் பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் களஆய்வு பணிகளை மேற்கொண்டனர். மேலும் நீரின் அளவைப் பொறுத்து மீண்டும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.