சுடுகாடு இடத்தை ஆக்கிரமித்து சாலை: மீட்டுத்தர மக்கள் கோரிக்கை

அழிஞ்சிவாக்கம் சுடுகாடு இடத்தை ஆக்கிரமித்து சாலை அமைப்பு இடத்தை மீட்டுத்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-30 07:00 GMT

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ஸ்ரீராம் நகர் பகுதி மக்களுக்கு சொந்தமான சுடுகாடு ஒன்று உள்ளது.

இந்த பகுதியில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட செங்கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கும் செங்கற்களை செங்குன்றம், பெரியபாளையம், சென்னை சுற்றியுள்ள உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல முறையான சாலை வசதி இல்லை. மேலும் ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விளைநிலங்களில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் நெற்பயிற் காய்கனிகள் உள்ளிட்ட பருவத்திற்கு ஏற்ப பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மழை காலங்களில் பயிர்களில் தேங்கி நிற்கும் மழை நீர் அருகாமையில் உள்ள கொசஸ் தலை ஆற்றில் சென்று சேர நீர் ஓடை ஒன்று உள்ளது. தற்போது இப்பகுதியில் தயாரிக்கும் செங்கற்கள் லாரிகளில் ஏற்றி எளிதாக கொண்டு செல்ல அத்துமீறி சுடுகாடு மற்றும் நீரோடையை ஆக்கிரமித்து சாலையை அமைத்து அவ்வையாக செல்வதால் மழைக்காலங்களில் நீர் செல்ல வழி இன்றி தண்ணீர் அப்பகுதியில் நின்று கடல் போல் காட்சி அளிக்கும்.மேலும் சுடுகாடை ஆக்கிரமித்ததால் போதிய இடம் வசதி இன்றி அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து பகுதி வாசிகள் சுடுகாட்டை மீட்டு தரக் கோரி அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தற்போதாவது சாலையை அகற்றி சுடுகாடு மற்றும் நீரோடையை சரி செய்து தர வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News