கும்மிடிப்பூண்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை தங்கி பணியாற்றி வந்த வட மாநில கூலித் தொழிலாளி மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தார்.

Update: 2023-12-28 10:11 GMT

கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில கூலி தொழிலாளி மர்ம விஷ காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் அருகே சித்தூர்நத்தம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில், ஒப்பந்த கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அனில் ஹேம்ப்ராம், (வயது 33). இவர் தொழிற்சாலை வளாகத்திற்குள் வசித்து வந்தார். இவருக்கு கடந்த 10 நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்து வந்துள்ளது.

மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால், உடன் தங்கி வேலை பார்த்து வந்த சக தொழிலாளர்கள் இவரை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு முதல் உதவி  சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு 108 அவசர உறுதி மூலம் கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார்.

வடமாநில தொழிலாளி ஒருவர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்தது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தொழிற்சாலைக்குள் சுகாதார துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அவருடன் வசித்து வரும் மற்ற தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும்.சித்தூர்நத்தம் கிராமத்திலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News