ஊத்துக்கோட்டை பேரூராட்சி: முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வேட்புமனு தாக்கல் முதல் நாளில் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை;

Update: 2022-01-29 03:30 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 5003 பேரும் , பெண் வாக்காளர்கள் 5459, இதர வாக்காளர் 1 என மொத்தம் 10463 வாக்காளர்கள் உள்ளனர்.

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பொதுவார்டு 6,  ஆதிதிராவிடர் பெண் 1 , ஆதிதிராவிடர் பொது 1 , பெண்கள் மட்டும் 7 என 15 வார்டுகள் உள்ளது.

தமிழக தேர்தல் ஆணையம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 தேதி நடைபெறும் எனவும் , இதில் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 தேதி வரை வார்டுகளில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவித்தது

இந்நிலையில் நேற்று ஊத்துக்கோட்டை பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை, திங்கள் கிழமை அமாவாசை என்பதால் அன்று வேட்பு மனு தாக்கல் செய்வது சூடுபிடிக்கும் என தெரிகிறது.

Tags:    

Similar News