ஆரணி ஆற்றில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட மேம்பாலம் அடிக்கல் நடும் விழா
New Fly Over Work Started பெரியபாளையம் அருகே புதுப்பாளையம்-காரணி இடையே செல்லும் ஆரணி ஆற்றின் குறுக்கே ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை அடிக்கல் நடவு செய்தார் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன்.
New Fly Over Work Started
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காரணி, நெல்வாய், புதுப்பாளையம், மங்களம், எருக்குவாய் உள்ளிட்ட 10.கிராமங்களில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரியபாளையம் வழியாக சுமார் 10கிமீ சுற்றி செல்லும் நிலை நீடித்து வந்தது.ஆரணி - பெரியபாளையம் சாலையில் இருந்து காரணி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக மாற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் சுமார் 30 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் ஆரணியாற்றில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனையடுத்து மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா உதவி கோட்ட பொறியாளர் ஆண்டி, உதவி பொறியாளர் சந்திரசேகர், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு ஆரணியாற்றில் காரணி கிராமத்திற்கு செல்லும் வகையிலான மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
ஆரணியாற்றில் 20கோடி ரூபாய் மதிப்பீட்டில் 175 மீட்டர் நீளத்திலும்,12 மீட்டர் அகலத்திலும் இந்த உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜே.மூர்த்தி, மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் உமா மகேஸ்வரி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர்வி.பி.ரவிக்குமார், பொது குழு உறுப்பினர்கள்ஏ.வி.இராமமூர்த்தி பா.செ.குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ், மாவட்ட பொருளாளர் ரமேஷ்,உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் கௌசல்யா முத்து நன்றி கூறினார்.