பெரியபாளையம் அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை இயக்கி வைத்த எம் எல் ஏ

New Bus Route Inauguration பெரியபாளையம் அருகே பனையஞ்சேரி புதிய வழித்தட பேருந்தை கோவிந்தராஜன் எம்.எல்.ஏ ஓட்டி வந்தார்.

Update: 2024-02-15 04:30 GMT

பெரியபாளையம் அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை இயக்கி வைத்தார் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன்.

New Bus Route Inauguration

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் புதிய வழித்தடத்தில் ஒரு பஸ் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சட்டசபையில் உறுதி அளித்தார்.இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் இருந்து எல்லாபுரம் ஒன்றியம் பனையஞ்சேரி கிராமத்தை இணைக்கும் வகையில் அரசு போக்குவரத்து கழக பேருந்து தடம் எண்: 115 பி என்ற பஸ் இயக்கப்பட்டது.இந்தப் பேருந்து கும்மிடிப்பூண்டி பஸ் நிலையத்தில் இருந்து

புதுகும்மிடிப்பூண்டி,சிறுபுழல்பேட்டை,பாத்தபாளையம்,பில்லாகுப்பம்,குருவராஜகண்டிகை,ராஜாகண்டிகை,ஐயர்கண்டிகை,கண்ணூர், பாலவாக்கம்,சுப்பிரமணியநகர்,ஆரணி வழியாக பனையஞ்சேரி கிராமம் வந்து சேரும்.மீண்டும் இதே வழித்தடத்தில் இந்தப் பேருந்து செல்லும்.

New Bus Route Inauguration



இந்த பேருந்தை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி பனையஞ்சேரி கிராமத்தில் நடைபெற்றது. இதனை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான

கோவிந்தராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர்,இந்தப் பேருந்தை பனையஞ்சேரி கிராமத்தில் இருந்து ஆரணி மசூதி வரையில் ஓட்டி வந்தார். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில்,புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கப்படுவதால் பொதுமக்கள் கும்மிடிப்பூண்டி சென்று வரும் பயண நேரம் இப்பேருந்தால் குறையும்,இதனால் விவசாயிகளும், இப்பகுதியைச் சேர்ந்தவர்களும் பயன்பெறுவர் என்று கோவிந்தராஜன் எம்.எல்.ஏ பேசினார்.மேலும், பனையஞ்சேரி கிராம மக்கள் தங்களது பகுதிக்கு சமுதாய கூடம் மற்றும் ரேஷன் கடை கட்டிடம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தக் கோரிக்கையையும் விரைவில் நிறைவேற்றி தருவேன் என்று‘எம் எல் ஏ உறுதி அளித்தார்.

New Bus Route Inauguration



இந்நிகழ்ச்சியில்,மாவட்ட பொருளாளர் ரமேஷ், எல்லாபுரம் ஒன்றிய கழக செயலாளர்கள் பி.ஜே.மூர்த்தி, பலசத்தியவேலு,பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி,கலை இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் ரவிக்குமார்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் .சங்கர்,மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், ஒன்றிய துணை அமைப்பாளர் வடமதுரை அப்புன், வழக்கறிஞர் முனுசாமி,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பனையஞ்சேரி பி.எஸ்.ரமேஷ்,ஊராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.கிரி, துணைத் தலைவர் ராக்கியப்பன்,ஆரணி பேரூர் திமுக பொருளாளர் கரிகாலன்,பேரூராட்சி மன்றத்துணைத்தலைவர் வழக்கறிஞர் சுகுமார் உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய, நகர,பேரூர்,கிளை கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News