கும்மிடிப்பூண்டி அருகே எல்லை காக்கும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
கும்மிடிப்பூண்டி அருகே பெரிய ஓபலாபுரம் ஸ்ரீ எல்லை காக்கும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.;
பெரிய ஓபுலாபுரம் அருள்மிகு ஸ்ரீ எல்லை காக்கும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,பெரிய ஒபுலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லை காக்கும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக குண்டத்தில் சிவாச்சாரியார்கள் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, இரண்டாம் கால யாக சாலை பூஜைகள், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்று முடிந்த பின்னர் யாக கலச பூஜைகளுடன் கலச நீர் சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்து மேல தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு கோபுர கலசங்களுக்கும், அம்மனுக்கும், புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், மஞ்சள், குங்குமம் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் கும்மிடிப்பூண்டி,மாதர்பாக்கம், எளாவூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.