Near Chennai Man Dead By Accident தொழிற்சாலையில் டவர் விழுந்து ஒருவர் உயிரிழப்பு :போலீசார் விசாரணை

Near Chennai Man Dead By Accident கும்மிடிப்பூண்டி இரும்பு உருக்கு ஆலையில் பழுது சரி செய்து கொண்டிருந்த தொழிலாளி மீது கூலிங் டவர் விழுந்து உயிரிழந்தார்.

Update: 2023-11-26 06:15 GMT

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி இரும்பு உருக்கு ஆலையில் கூலிங் டவர் மேலே விழுந்து வட மாநில இளைஞர் உயிர் இழந்தார். 

Near Chennai Man Dead By Accident

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 20 தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலைகளில் இரும்பு உருக்கு ஆலை, ஆட்டோமொபைல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, அட்டை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, கெமிக்கல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, பர்னிச்சர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு விதமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

மேற்கண்ட தொழிற்சாலைகளில் ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், உத்திரபிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட அதிக அளவில் வடமாநில இளைஞர்கள் வேலை பார்ப்பது வருகின்றனர். இதனை அடுத்து இந்த தொழிற்சாலைகளில் போதிய பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் பணிபுரிந்து வருவதால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்பட்டு வருவது தொடர் கதையாக ஆகியுள்ளது. இதனை தொழிலாளர் பாதுகாப்பு துறை அலுவலர் கண்டுகொள்ளாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனியார் இரும்பு உருக்கு ஆலைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் வேலை பார்த்து வரும் நிலையில்.இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப்சாகு( வயது 38). என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாகவே பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் பணிக்கு சென்ற நிலையில் தொழிற்சாலையில் கூலிங் டவர் பழுது காரணமாக பணியாளர் ஒருவர் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதிலிருந்து உதிரி பாகம் ஒன்று பிரதீப் சாகும் மீது விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.இதை அறிந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு கும்மிடிப்பூண்டி மேட்டு காலனி பகுதியில் உள்ள எச்.எம்.சி.தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அனுமதித்த நிலையில் அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்த வந்த நிலையில். அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சக பணியாளர்களிடையே சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News