அன்னை தெரசா அறக்கட்டளை ஆண்டு விழாவையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி
அன்னை தெரசா அறக்கட்டளை ஆண்டு விழாவையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அன்னை தெரேசா கல்வி மருத்துவம் விளையாட்டு சமுதாய அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும், ஓய்வு பெற்ற முன்னாள் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் டாக்டர் ஏ. இளவரசி அறக்கட்டளை நிறுவி இந்த அறக்கட்டளையின் மூலம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வேலையில்லாத் திண்டாட்டத்தில் அவதிப்பட்டு வந்த திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் எல்லாபுரம் பூண்டி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு தரப்பிலான ஏழை எளிய மக்களுக்கு நாள்தோறும் மழை வெயில் என்று பாராமல் அவர்கள் வாழும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று கொரோனா நிவாரண நிதியாக அரிசி பருப்பு உள்ளிட்டவை வழங்கி அதுமட்டுமில்லாமல் நாள்தோறும் உணவு தயாரித்து இந்த அறக்கட்டளை மூலம் பசியில் வாடும் மக்களை தேடி சென்று உணவை வழங்கி வந்தார்.
இந்தநிலையில் இந்த அறக்கட்டளை நிறுவி ஓராண்டு முடிவடைந்த நிலையில் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு விழா வியாழக்கிழமை கண்ணிகைபேர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிஅறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஏ. இளவரசி, தலைமையில் நடைபெற்றது. அறக்கட்டளையின் செயலாளர் அழிஞ்சிவாக்கம் எம்.ரகு, பொருளாளர் பிரின்ஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக, தமிழ்நாடு மாநில தகவல் உரிமை சட்ட ஆணையாளர் பிரதாப் குமார், எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை கே. ரமேஷ், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆ.சத்திய வேலு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மஞ்சங்கரணை ஸ்ரீதர், தொழில் அதிபர்கள் வெங்கட் நாராயணன்,முருகன், மற்றும் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் முன்னதாக குத்துவிளக்கை ஏற்றி வைத்து பல்வேறு சேவைகள் குறித்து இதனை நடத்தி வரும் டாக்டர் இளவரசியை பாராட்டி சிறப்புரையாற்றினர்.
பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 100 ஏழைத் தாய்மார்களுக்கு புடவை 30 ஆண்களுக்கு வேட்டி மற்றும் துண்டு, பள்ளி மாணவர்களுக்கு கல்வி சம்பந்தமான நோட்டுப் புத்தகம். பேனா, பேக். கணினி சம்பந்தமான ஜாமென்ட்ரி பாக்ஸ், உள்ளிட்டவை வழங்கப்பட்டது பின்னர் மருத்துவ செலவிற்கு ஒருவருக்கு 5 ஆயிரமும் வீதம் ரூபாய் 10.ஆயிரம் கல்வி தொடர்பான 3. பேருக்கு தலா ரூபாய் 3000. உதவித் தொகையும் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 350 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் கணேசன் வாசுதேவன் மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் சிராஜ், கென்னடி, வேலாயுதம், தினகரன், தேவி பிரியா, நாகராணி, ஆர்.ஹரி கிருஷ்ணன், ஆர்.நிஷாந்த், செல்வம், ரோஸ், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் அழிஞ்சிவாக்கம் எம்.ரகு நன்றி கூறினார்.