கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கிய மகளை காப்பாற்ற முயன்ற தாய் உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி அருகே சிருபுழல்பேட்டையில் தாய் மகள் இருவரை மின்சாரம் தாக்கியதில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்;
கும்மிடிப்பூண்டி அருகே சிறுபுழல்பேட்டையில் தாய் மகள் இருவரை மின்சாரம் தாக்கியதில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சிறுபுழல்பேட்டை ஊராட்சி பெருமாள்கோவில் தெருவை சேர்ந்த ராணி 65 இவர் வழக்கம் போல் இன்று காலை வீட்டு வேலை செய்யும் போது வீட்டில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இவரது அலறல் சத்தம் கேட்ட ராணியின் மகள் ஜானகி( 38 )வீட்டில் நுழைந்து பார்த்தபோது ராணி மயக்கமடைந்த நிலையில் இருப்பதைக் கண்ட ஜானகி அவரை காப்பாற்ற முயற்சித்த போது ஜானகியையும் மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது.
மயக்கம் அடைந்த நிலையில் இருந்த தாய், மகள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது தாய் உயிரிழந்ததால் அவரை வீட்டுக்கு உறவினர்கள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த சிப்காட் காவல் நிலைய போலீசாரிடம் ராணியின் உறவினர்கள் ராணியின் மகள் ஜானகி தான் என்று பொய்யான தகவலை கூறியுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராணியின் மகள் ஜானகி தனது தாயாரை மின்சாரம் தாக்கியதாகவும் அவரை மீட்க முயற்சித்த போது தன்னையும் மின்சாரம் தாக்கியதாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்ததார்.
அதன் அடிப்படையில் சிறுபுழல் பேட்டை கிராமத்தில் ராணியின் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.