ஊத்துக்கோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை

கும்மிடிப்பூண்டி ஊத்துக்கோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;

Update: 2023-04-24 00:00 GMT

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், பல்வேறு பகுதிகளில் கொளுத்தி எடுத்த கோடை வெயில் இடையே திடீரென்று பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென் இந்திய பகுதியில் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக கோடை வெயிலுக்கு இடையே அடுத்த 4 நாட்கள் தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் 4 நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆரணி, பாலவாக்கம், தண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு இடி மின்னலுடன் சூறாவளி காற்றுடன் பெய்த மிதமான மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News