அரசு பள்ளியில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த எம்எல்ஏ.,
கும்மிடிப்பூண்டி அரசு பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை சட்டமன்ற உறுப்பினர் மாலை அணிவித்து மலர்தூவி திறந்து வைத்தார்.;
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு கே.எல்.கே ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருவுருவச்சிலை புதிதாக அமைக்கப்பட்டதை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் மாலை அணிவித்து மலர் தூவி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்குப்பின் பேசிய எம்எல்ஏ., கோவிந்தராஜன், கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளால் பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படும் நிலையில் சமூகப்பணி நிதி மூலம் கல்வி வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிக்காத அளவிற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.