அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய எம்.எல்.ஏ

2 பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்.

Update: 2024-09-25 09:15 GMT

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன்.

பெரியபாளையம், கன்னிகைப்பேர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் டி. ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம், கன்னிகைப்பேர் ஆகிய இடங்களில் உள்ள  அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 225 மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெரியபாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் சம்பத், கன்னிகைப்பேர் பள்ளியின் தலைமை ஆசிரியர் பேரின்ப செல்வி ஆகியோர் தலைமை வகித்தார்கள்.

எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.ஜெ. மூர்த்தி, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், கன்னிகைப் பேர் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான ஆ.சத்திய வேலு, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என். கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் எ.வி.ராமமூர்த்தி, குணசேகரன, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் பெரியபாளையம் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஏழுமலை, பொருளாளர் வெங்கடாசலம்,பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜான்சி ராணி வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக  செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினருமான டி.ஜெ. கோவிந்தராஜன் கலந்துகொண்டு பேசுகையில் மாணவர்கள் சிறப்பாக படித்து வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும். நீங்கள் படித்த பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நல்ல பெருமை சேர்க்க வேண்டும், அழியாத சொத்து கல்வி மட்டுமே என்று நம் முதல்வர் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கு தாயுள்ளத்தோடு ஒவ்வொரு திட்டத்தை சிந்தித்து செயல்படுத்தி வருகிறார் நம் முதல்வர் அந்த விதத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி,இலவச பேருந்து சேவை, கல்லூரியில் உயர்கல்வி படிக்கின்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000, கிராமங்களில் இருந்து நடந்து வந்து படிக்கின்ற மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா சைக்கிள் ஒன்றல்ல இரண்டல்ல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி மற்ற மாநிலங்கள் தமிழகத்தை திரும்பி பார்க்கும் அளவிற்கு திட்டங்களை செயல்படுத்து வருகின்றார் என பேசினார்.

விழாவில் 225 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் ரமேஷ், அவைத்தலைவர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் தனசேகரன், சம்பத், சந்திரசேகர், அப்புன், ராஜா, ஐ.ராஜா, நீதி செல்வம், சுரேஷ், பாஸ்கர், தணிகாசலம், தினேஷ், ஆத்துப்பாக்கம் வேலு, பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News