பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூ.125 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை இந்து அறநிலையதுறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

Update: 2021-12-16 05:45 GMT

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூ.125 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளை இந்து அறநிலையதுறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி ஆற்றங்கரை அருகே உள்ளது   பெரியபாளையத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் திரு கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடிதிருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனால் ஆடித்திருவிழாவை ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 16. அல்லது 17 ந் தேதி தொடங்கும்.

இந்த விழா 15.வாரங்கள் மிகச் சிறப்பாக நடைபெறும் இத்திருவிழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் இல்லாமல் அண்டைை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

இந்நிலையில் இந்த கோயிலுக்கு தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையதுறையின் தமிழக அரசின் மானிய கோரிக்கையின் போது பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடிமாதம் லட்சக்கணக்காண பக்தர்கள் வருகை தருவார்கள் ஆகையால் ரூ.125 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் நடைபெற உள்ளது.

இதில் விருந்து மண்டபங்கள், அன்னதான கூடம், வேப்பஞ்சேலை கட்டும் இடம், வாகனம் நிறுத்துமிடம், சாமி படங்கள் பிரசாதம் விற்பனை செய்யும் இடம், இரவு பக்தர்கள் தங்குவதற்கு கட்டிடம் , காலணிகள் பாதுகாப்பது போன்ற அடிப்படை வசதிகள் செய்ய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு கோவில் சுற்றி உள்ள தேவைப்பட்டால் வட்டார வளர்ச்சி அலுவலக இடங்களை அரசு ஏற்பது, மேலும் கோயிலை சுற்றியுள்ள தனியாருக்கு சொந்தமான இடங்கள் விற்பனைக்கு வந்தால் அதையும் அரசே வாங்கும் என தெரிவித்தார்.

ஆய்வின் போது அவருடன் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் லோக மித்ரா, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சேதுரத்தினம் அம்மாள், மற்றும் கட்சி நிர்வாகிகள் தலைமை செயற்குழு உறுப்பினரும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் சத்திய வேலு, சோழவரம் ஒன்றிய கழகச் செயலாளர் செல்வசேகரன், கேவி. லோகேஷ், வழக்கறிஞர் சீனிவாசன், முனுசாமி, அகர் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News